அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையத்தில் ஓட்டுசாவடி

59பார்த்தது
அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையத்தில் ஓட்டுசாவடி
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கான, ஆவடி அடுத்த மோரை ஊராட்சி, புதிய கன்னியம்மன் நகரில், 8, 000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டளிக்க, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்து ஓட்டுச்சாவடிகள்; புதிய கன்னியம்மன் நகர் அங்கன்வாடி மையத்தில் பி. சி. டி. , பிளாக்குகளில் மூன்று ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 'பி' பிளாக் ஓட்டுச்சாவடியில், 1, 094; 'சி' பிளாக்கில், 683; 'டி' பிளாக்கில், 720 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். இந்த மையங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய கன்னியம்மன் நகர் குடியிருப்போர் பொது நலச்சங்கத்தினர் கூறியதாவது: அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையம், 2021 சட்டசபை தேர்தலில் ஓட்டுச்சாவடியாக பயன்படுத்தப்பட்டது. அப்போதே வெளிச்சம், காற்றோட்டமில்லாத அறை, தேர்தல் பணியாளர்களுக்கான கழிப்பறை உள்ளிட்ட, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவில்லை. இடநெருக்கடியான சேதமடைந்த பழைய கட்டடத்தில், பாதுகாப்பற்ற நிலையிலே ஓட்டுப்பதிவு நடந்தது.

அதனால், பெண் அலுவலர்கள் இயற்கை உபாதைகளுக்காக, அக்கம் பக்கம் உள்ள வீடுகள், மறைவிடங்களை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. வாக்காளர்கள் நிற்பதற்கு நிழற்பந்தலும் அமைக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேக்ஸ் :