ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் எம்எல்ஏ

1041பார்த்தது
ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்கும் எம்எல்ஏ
மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் கலைஞர் உணவகம் சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் (04. 01. 2024) வியாழன் கிழமையான இன்று 583- வது நாளாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏழை எளிய பொதுமக்கள் அன்னதான விழாவில் பங்கேற்று உணவருந்தி சென்றனர்.

மேலும் கலைஞர் உணவகம் சார்பில் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் விஜி. ராஜேந்திரன் அவர்களுக்கு பொதுமக்கள் தங்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி