ஆவடி: மூவர் குண்டாசில் கைது

4030பார்த்தது
ஆவடி: மூவர் குண்டாசில் கைது
ஆவடி காவல் ஆணையரகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அதன்படி, மாங்காடு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், தொடர்ந்து குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மாங்காடு, தெற்கு காமாட்சி நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 44. பூச்சி அத்திப்பேடு, பஜார் தெருவைச் சேர்ந்த பிரதாப் சிங் கிறிஸ்டோபர், 34 மற்றும் புழல் அடுத்த புத்தகரம், ஜெ. பி. , நகரைச் சேர்ந்த ஜெயபாலன் (வயது 41) ஆகியோர், கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, குண்டர் தடுப்பு சட்டத்தில், நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி