திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையின் காரணமாக பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மாநகரில் பலாப்பழம் வியாபாரம் களைகட்டி வருகின்றது. ஒரு பலாப்பழமானது 200 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.