மூன்றரை டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது

85பார்த்தது
மூன்றரை டன் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் கைது
நெல்லை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் தாழையூத்து ஸ்ரீநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தோஸ்த் வாகனத்தை சோதனையிட்ட போது 3600 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தி கொண்டு சென்றது தெரியவந்தது. எனவே வாகனத்தில் இருந்த அந்தோணி ராஜ் முத்துராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி