எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல செயலாளராக முன்னாள் பொதுச்செயலாளர் கனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 10) நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் புதிய மண்டல செயலாளர் கனியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வின் போது நெல்லை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் முல்லை மஜித், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது ஷாபி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.