தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்செந்தூர்-நெல்லை ரயில் வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே இன்று அறிவித்துள்ளது. மேலும் இதனை பயணிகள் மற்றும் திருச்செந்தூருக்கு செல்லக்கூடிய பக்தர்கள் கருத்தில் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.