சுற்றுலா செல்லும் போது கையில் இருக்க வேண்டிய பொருட்கள்

54பார்த்தது
சுற்றுலா செல்லும் போது கையில் இருக்க வேண்டிய பொருட்கள்
சுற்றுலா செல்லும் போது தண்ணீரின் தேவை இன்றியமையாதது. ஏனெனில் ஊர் சுற்றும் போது நிறைய பேருக்கு நீர்போக்கு ஏற்படும். வெளியிடங்களுக்கு செல்லும் போது சுகாதாரம் மிகவும் அவசியம். சுற்றுலா செல்லும் இடங்களில் கழிவறை வசதி போன்றவை மாறுபடுகிறது. அதில் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்க டாய்லெட் பேப்பர் மற்றும் லிக்விடு சானிடைசரை உடன் வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுடைய பயண திட்டம் வட இந்தியாவாக இருந்தாலும் சரி, தென்னிந்தியாவாக இருந்தாலும் சரி சன்ஸ்கிரீனை எடுத்துச் செல்வது மிகவும் நலம். பாதுகாப்பான ஊராக இருந்தாலும் அங்கும் ஆபத்து ஏற்படலாம். அதை தவிர்ப்பதற்கும், ஆபத்து ஏற்படும் நேரத்தில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிப்பதற்கும் பெப்பர் ஸ்பிரே உதவியாக இருக்கும்.
Job Suitcase

Jobs near you