மனநலம் பாதித்த முதியவருக்கு உதவிய சமூக ஆர்வலர்

67பார்த்தது
மனநலம் பாதித்த முதியவருக்கு உதவிய சமூக ஆர்வலர்
மன நலம் பாதித்த முதியவர் சிகிச்சைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஆண்டிபட்டி, தேனி - மதுரை செல்லும் சாலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 61 வயது மதிக்கத்தக்க ஆண் மனநலம் பாதிக்கப்பட்டு உடல் சோர்வுடன் மரண தருவாயில் படுத்திருந்தார். இது குறித்து ம. சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமாருக்கு தகவல் கிடைத்தது. தேனி எஸ். பி. , ஆலோசனையில், ஆண்டிபட்டி டி. எஸ். பி. , மற்றும் போலீசார் உதவியுடன் மனநலம் பாதித்தவரை மீட்டு, பெரியகுளம் அரசு மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அந்த முதியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவர் முழு குணமடைந்துள்ளார். விசாரித்ததில் அவர் வருஷநாடு காவல் காவல் நிலையத்துக்குட்பட்ட வாலிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சசிதரன் என்பது தெரிய வந்தது. தனது மகன், மனைவி இறந்தபின், ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்ததாகவும் சசிதரன் தெரிவித்தார். இதனை அடுத்து அந்த முதியவரை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். நெகிழ்ச்சியான சம்பவம் அனைவருக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you