குளத்து கரையில் குவாட்டர் விற்றவர் கைது!

72பார்த்தது
குளத்து கரையில் குவாட்டர் விற்றவர் கைது!
இராயப்பன்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஆனைமலையான் பட்டி குளத்துக்கரையில் இராயப்பன் பட்டியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருப்பதை கண்டனர். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடமிருந்து 17 குவாட்டர் பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி