உத்தமபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

65பார்த்தது
உத்தமபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கத் துறையினர் சிறப்பு சார்பு ஆய்வாளர் அழகர்ராஜா தலைமையில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீலையம்பட்டி செங்குளம் கரையில் அதே பகுதியை சேர்ந்த பிச்சைமணி என்பவர் சட்டவிரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். அதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடமிருந்து 16 மது பாட்டில்களை கைப்பற்றி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி