வாகனங்களில் அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்

1920பார்த்தது
வாகனங்களில் அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
தேனி டூ மூணார் செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் போடி நகர் பகுதியில் டாரஸ் லாரிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால் மின் வயர் மற்றும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுகின்றது. மின் வயர் துண்டிக்கப்படுவதால் பின்வரும் இரு சக்கர வாகனம் ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் மீது மின்வயர்கள் விழுந்து மின்சாரம் பாய்ந்து உயிர் இழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான அதிக பாரம் ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அதிகளவு தண்டத்தொகை வசூல் செய்ய வேண்டும் என நகர வாழ் சமூக நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி