கணவன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட மனைவி!

1926பார்த்தது
கணவன் இறந்த துக்கத்தில் உயிரைவிட்ட மனைவி!
நாமக்கல் வமாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நாராயணன் (68) ராஜேஸ்வரி (67) தம்பதி. இவர்கள் கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த ராராயணன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர்களது உறவினர்களுக்கு ராஜேஸ்வரி தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின்பு மிகவும் மன வருத்தத்துடன் இருந்த ராஜேஸ்வரி, கணவர் இறந்த 3 மணி நேரத்தில் அவரும் மாரடைப்பு ஏற்பட்டு தனது உயிரை விட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி