வரலாற்று சிறப்புமிக்க வேளாண் நிதி நிலை அறிக்கையை திமுக அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்றாலும் திறமையான கையாண்டு இருக்கும் நிலையில், வரலாற்று சிறப்புமிக்க நிதி நிலை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விவசாயிகளிடம் எதிர்க்கட்சிகளிடம் ஆலோசிக்காமல் இரவோடு இரவாக மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர். எதற்கு இதனை கொண்டு வந்தார்கள் எதற்கு திரும்பி பெற்றார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை, நமக்கும் தெரியவில்லை. ஆனால் பாதிப்பு விவசாயிகளுக்கு தான். கள் இறக்குமதி தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.