கத்தியை காட்டி மிரட்டி மாமூல் வசூலித்த ரவுடிகள் (வீடியோ)

66528பார்த்தது
சென்னையை அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே பேக்கரி உரிமையாளரை கத்தியை காட்டி
மிரட்டி மூன்று ரவுடிகள் பணம் பறித்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழன் அன்று கஞ்சா போதையில் பேக்கரிக்கு வந்த மூன்று ரவுடிகள், கடையில் இருந்த பெண்ணிடம் 1000 ரூபாய் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் கத்தியை வைத்து கடையில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். இதனால் பயந்துபோன அப்பெண் பணத்தை கொடுத்துள்ளார். போலீஸூக்கு போனால் கொலை செய்துவிடுவேன் என்றும் ரவுடிகள் மிரட்டியுள்ளனர். சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து மூன்று ரவுடிகளையும் போலீசார் கைதுசெய்தனர்.

தொடர்புடைய செய்தி