நமது உடலின் அதிக வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பகுதிகள்
மூளை, இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் போன்ற மனித உடலின் உள் உறுப்புகள் அதிக வெப்பமானதாகக் கருதப்படுகிறது. இந்த உறுப்புகளின் வெப்பநிலை 37 முதல் 37.8 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். உடலானது, தேவைக்கேற்ப இந்த வெப்பநிலையை தானாக சரிசெய்யும். குறைவான வெப்பநிலை கொண்ட இடமாக அக்குள் உள்ளது. அக்குள் வெப்பநிலை பொதுவாக 35.5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அக்குள்கள் வியர்ப்பதற்கும் காரணம் இதுதான்.