சட்டமன்ற உறுப்பினராக முதல் முஸ்லிம் பெண்.. எங்கு தெரியுமா?
பாராபதி - கட்டாக் சட்டமன்ற உறுப்பினர் சோபியா பிர்தௌஸ் ஒடிசாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். மாநில சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவரது தந்தையான காங்கிரஸ் மூத்த தலைவரான மோகிம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து சோபியா இந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாஜகவின் பூர்ணச்சந்திர மகாபத்ராவை எதிர்த்து 8,000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.