தஞ்சாவூர் அருகே ஸ்வீட் கடையில் திருட்டு

66பார்த்தது
தஞ்சாவூர் அருகே ஸ்வீட் கடையில் திருட்டு
தஞ்சாவூர் அருகே ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து எல்இடி டிவி மற்றும் ரூ. 25, 000 ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை கீழ வாசல் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். (60). இவர் கரந்தை சுங்கச்சாவடி பைபாஸ் சாலையில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இரு தினங்களுக்கு முன் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவி மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் தஞ்சை கிழக்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடையில் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி