பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயின் பறிப்பு

73பார்த்தது
பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயின் பறிப்பு
பூதலூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 பவுன் தாலி செயினை பறித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பூதலூர் அருகே சித்தரக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வகுமார் மனைவி கோமதி ( 45 ). இவர் தனது கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் வீட்டின் பின்புறம் வந்த மர்ம நபர் வீட்டில் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த கோமதியின் கழுத்தில் இருந்த குண்டு மணியுடன் தாலி செயின் 4 பவுனை அறுத்துக் கொண்டு ஓடும் பொழுது திருடன் என்று கத்தியுள்ளனர். ஆனால் அவருடன் கூட இருந்த மற்றொருவரும் சேர்ந்து தப்பித்துவிட்டனாம். இது குறித்து பூதலூர் போலீசில் செல்வகுமார் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்தார் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி