தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்
தீபக் ஜேக்கப் தலைமையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 257 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர்.
தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி இறந்த நபரின் குடும்பத்தினருக்கு ரூ. 1, 00, 000 ற்கான காசோலையும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தீ விபத்தில் இறந்த, பாபநாசம் வட்டம் பசுபதி கோயில் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் குடும்பத்தினருக்கு ரூ. 4, 00, 000 ற்கான காசோலையும், மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து மலர்ஜோதி என்பவர் நுரையீரல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தொடர் சிகிச்சை பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் செறிவூட்டியினையும், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் ரூ. 1, 76, 000 மதிப்பிலான செயற்கை கால் ஒரு மாணவனுக்கும், சக்கர நாற்காலி ஒரு நபருக்கும், காதொலிக் கருவி ஒரு நபருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் கர்மா, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ். சங்கர், உதவி ஆணையர் (கலால்) எம். ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.