விளார் பூச்சந்தை அருகே கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு

68பார்த்தது
விளார் பூச்சந்தை அருகே கழிவுகள் கொட்டுவதால் சுகாதாரக்கேடு
தஞ்சை பூச்சந்தைக்கு பின்புறம் அழுகிய பழங்கள் உட்பட கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
தஞ்சை விளார் சாலையில் பூச்சந்தை உள்ளது. இப்பூச்சந்தையை ஒட்டி பழங்கள், காய்கறிகள், நாட்டுக்கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பழங்கள் விற்பனையான பின்னர் எஞ்சிய அதாவது கெட்டுப்போன பழங்களை, அழுகிய காய்கறிகளை பூச் சந்தையின் பின்புறம் கொட்டிவிட்டு செல்கின்றனர்.

இவ்வாறு கொட்டப்படும் அழுகிய பழங்கள், காய்கறிகளில் ஈ, கொசுக்கள் அதிகளவில் மொய்க்கிறது.
பின்னர் அவைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் மொய்ப்பதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெருவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் குடியிருக்கவே சிரமம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி தஞ்சை பூச்சந்தைக்கு பின்புறம் கொட்டப்பட்டுள்ள அழுகிய பழங்கள் உட்பட கழிவு பொருட்ளை அகற்றி மீண்டும் அப்பகுதியில் கொட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி