முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து மதிமுக செயற்குழு தீர்மானம்

71பார்த்தது
முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து மதிமுக செயற்குழு தீர்மானம்
இயற்கை பேரிடரை திறம்பட கையாண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சை தெற்கு மாவட்ட மதிமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் அப்பர் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. மாநகர செயலாளர் துரைசிங்கம் வரவேற்றார். தணிக்கை குழு உறுப்பினர் அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு பேசினார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் சுகந்தி துரைசிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் இளங்கோவன், கவிதா சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, பொன். ஆறுமுகம், சாமி தமிழ்ச்செல்வன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை பொது செயலர் ஆடுதுறை முருகன், கொள்கை விளக்க செயலர் வந்தியத்தேவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், மதிமுக இடம்பெறும் கூட்டணியில் உரிய தொகுதிகளை கேட்டுப் பெறுவது, அவ்வாறு பெறக்கூடிய தொகுதிகளில் முதல் வாய்ப்பை முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கு பெற்று தர வேண்டும். வரலாறு காணாத வகையில் பெய்துள்ள கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர் சேதம் பொருட்செதம் ஏற்படாமல் திறம்பட பணியாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சிமியோன் ராஜ், ஹாஜா நஜிமுதீன், சுப்பையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேற்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்

தொடர்புடைய செய்தி