பள்ளியில் தேர்வுகளை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

69பார்த்தது
பள்ளியில் தேர்வுகளை கொண்டாடுவோம் நிகழ்ச்சி
தஞ்சாவூர் தஞ்சை தாமரை பன்னாட்டுப் பள்ளியில் "தேர்வுகளைக் கொண்டாடுவோம்" என்னும் நிகழ்ச்சி நடந்தது. தாமரை பன்னாட்டுப் பள்ளி தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். தஞ்சை, கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்2 படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகர் தாமு பேசுகையில், மாணவர்கள் தம் இலக்கை அடையச் செய்வதே இலக்கு. ஆசிரியர் பாடம் கற்பித்தலின்
போது மாணவர்கள் கேட்டல், உற்று நோக்கலை விட வினாக்கள் கேட்பதே அவர்களை வெற்றியாளராக மாற்றும் என்றார். பள்ளி துணைத்தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளி முதல்வர் விஜயா ஸ்ரீதர், துணை முதல்வர் ஜெய கணேஷ், நடுநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா, தொடக்கநிலைத் தலைமை ஆசிரியை பிரவினா ஆகியோர் கலந்து கொண்டனர். முகிலன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி