விதிமீறலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 15. 84 லட்சம் விடுவிப்பு

60பார்த்தது
விதிமீறலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 15. 84 லட்சம் விடுவிப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடக்கிறது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 12 பேர் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு
பொருட்கள், பணம் கொண்டு செல்வதை தடுப்பதற்காக 72
பறக்கும் படை குழுக்களும், 24 நிலையான கண்காணிப்பு
குழுக்கள் மற்றும் 8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட
பகுதிகளில் பறக்கும்படை குழுவினர் கனரக வாகனங்களை
சோதனை செய்ததில் தேர்தல் நடத்தை விதிமீறல் காரணமாக
10 பேரிடம் இருந்து ரூ. 15 லட்சத்து 84 ஆயிரத்து 383 பறிமுதல்
செய்யப்பட்டு சார்நிலை கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்
மற்றும் விசாரணையின்படி தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு ரூ. 15 லட்சத்து 84 ஆயிரத்து 383 விடுவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி கைப்
பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் மாவட்ட மேல்முறையீடு குழுவினர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விடுவித்து
கொள்ள ஏதுவாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத
வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என
மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி