ஒரத்தநாடு: அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

2922பார்த்தது
ஒரத்தநாடு: அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு
ஒரத்தநாடு அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட் டம், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு கடைத்தெருவில் சனிக்கிழமை இரவு ஓரத்தநாட்டில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இது குறித்து பேருந்து ஓட்டுனர் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பாப்பாநாடு காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை கல்வீசி உடைத்தது பாப்பாநாடு சங்கரன் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சுதர்சன் (35) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி