மாட்டுவண்டியில் ஊர்வலமாக வந்த மணமக்களை ரசித்த பொதுமக்கள்

80பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பூக்கொல்லை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் - நாகஜோதி திருமணம் ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோயிலில் நடந்தது.

வெங்கடேஷ் சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர்களது குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். இதனால் தன்னுடைய திருமணத்தை பாரம்பரிய முறைப்படி, விவசாயக் குடும்பங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் மாடுகளும் தங்களுடைய திருமணத்தில் பங்கு பெற வேண்டும் என நண்பர்களிடம் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நண்பர்கள் அனைவரும் திருமணம் முடிந்ததும் மணமக்கள் இருவரையும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாட்டு வண்டியை மணமகன் ஓட்ட 2 கிலோ மீட்டர் வரை ஊர்வலம் நடந்தது.
பொதுவாக திருமணங்களில் குதிரை சாரட் வண்டிகளிலும் காரிலும், மண மக்கள் ஊர்வலமாக வருவது வழக்கம். இது பாரம்பரிய முறையில் நடைபெற்றதை உணர்த்தும் விதமாக இருந்ததால் பேருந்துகளில் சென்ற பயணிகள், சாலையில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்தவாறு சென்றனர். பேராவூரணியில் இவர்களுடைய திருமணம் பேசு பொருளாகி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி