தடைக்காலம் நிறைவு; விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார்

77பார்த்தது
தடைக்காலம் நிறைவு; விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார்
மீன்பிடி தடைக்காலம் வரும் 14ஆம் தேதி நிறைவடையுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய கடலோரப் பகுதிகளில் தடை காலத்தை ஒட்டி 146 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்த படகுகள் அனைத்தும் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகளை சீரமைப்பது, படகுகளை மராமத்து செய்வது, உபகரணங்களை பழுது நீக்குவது போன்ற பணிகளை தடைக்காலத்தில் மீனவர்கள் மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், துறைமுகங்களில் கடை நடத்துவோர், கருவாடு வியாபாரிகள், ஐஸ் கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதற்கான தடைக்காலம் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.

அதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார். படகு வலை தளவாடப் பொருட்களை கடலுக்கு செல்ல தயார் நிலையில் வைத்திருக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி