தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வன்னியடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் வன்னியடி காவிரி தென்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி , அலகு காவடி, அக்கினி கொப்பரை, எடுத்து முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்