தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர் கனமழை பெய்தது. இதனால் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளானது. பருத்தி சாகுபடி செய்யப்பட்ட பயிர்களும் சேதம் அடைந்துள்ள நிலையில், உடனடியாக வருவாய்த் துறையும் வேளாண் துறையும் கணக்கெடுப்பு பணியை துவங்க வலியுறுத்தியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சேதமடைந்த கோவிந்தநல்லூர் பகுதியில் நெற்பயிர் வயலில்
இறங்கி நின்று மெலட்டூர், ரெங்கநாதபுரம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரமும் பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்க வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்