பள்ளி மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ  புத்தகங்கள் வழங்கினார்

81பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி துவங்கப்பட்டது. பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வருகை புரிந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாசர், பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, உதவி ஆசிரியை தமிழ் தென்றல், சத்துணவு அமைப்பாளர் ஸ்ரீவித்யா,
கழக மூத்த முன்னோடி ரமணி, ஒப்பந்ததாரர் மணிவண்ணன்,
மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி