கபிஸ்தலம் அருகே தனியார் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்

64பார்த்தது
கபிஸ்தலம் அருகே தனியார் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் அருகே குடந்தை கர்மவீரர் காமராஜர் அறக்கட்டளை மற்றும் கபிஸ்தலம் ஜேக் & ஜில் மெட்ரிகுலேசன் பள்ளியின் நிறுவனர் கிறிஸ்டியானா மைக்கேல் அவர்களின் நினைவாக
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
குடந்தை கர்மவீரர் காமராஜர் அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் தலைமையிலும்,
கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி, பாபநாசம் நாடார் உறவு முறை தலைவர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. லயன்ஸ்
முஹம்மது அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை காமராஜர் நற்பணி மன்றம். தலைவர்
சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். முகாமில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரத்தம் அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதிக்கப்பட்டது. 60 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். 13 பேருக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளிநிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி