நெகிழி பொருட்களை சேகரித்து ஊராட்சியில் ஒப்படைத்த மாணவர்கள்

75பார்த்தது
நெகிழி பொருட்களை சேகரித்து ஊராட்சியில் ஒப்படைத்த மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' என்ற திட்டத்தின் கீழ், தேசிய பசுமைப் படை மாணவர்கள் மூலம் நெகிழி இல்லா பள்ளி வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குப்பையை தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரக்குழி மேலாண்மை மூலம் உரமாக்குதல், மக்காத குப்பையை மறுசுழற்சிக்கு அனுப்புதல், நிழல் தரும் மற்றும் பழமரக் கன்றுகளை
வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதிசெய்தல், சுகாதாரமான கழிப்பறை, காய்கறி தோட்டம் அமைத்தல், மூலிகைத் தோட்டம் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தேசிய பசுமைப் படை மாணவர்கள் 25 பேர் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில்
ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் தவிர்க்க இயலாமல் பயன்படுத்தும் 12 கிலோ நெகிழிப் பொருட்களை சேகரித்து, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மாரிமுத்துவிடம் நேற்று ஒப்படைத்தனர். இந்நிகழ்வில், தலைமையாசிரியர் பி. ராமமூர்த்தி, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பொ. செல்வம் உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி