மழையில் சேதமடைந்த விவசாயப் பயிர்களை பாபநாசம் எம்எல்ஏ ஆய்வு

77பார்த்தது
மழையில் சேதமடைந்த விவசாயப் பயிர்களை பாபநாசம் எம்எல்ஏ ஆய்வு
பாபநாசம் தொகுதி அம்மாப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள இடையிருப்பு,
கோவிந்தநல்லூர்,
ரெங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை மாலை பலத்த சூரைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் நெல், பருத்தி போன்ற விவசாயப்பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளானது. மேலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததன் காரணமாக மின் கம்பங்கள் சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களை பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று பார்வையிட்டார். சேதமடைந்துள்ள வேளாண் பயிர்கள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பை நடத்தி அறிக்கை தருமாறு வேளாண்துறை அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
சேதமடைந்த மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்த மின்வாரிய பெறியாளர்கள், பணியாளர்களிடம் சேதம் குறித்த விபரங்களை கேட்டு விரைந்து பணிகளை முடித்து தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு மின்வாரிய அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் அவர்களின் கோரிக்கையினை கேட்டு உரிய இழப்பீடுகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி