மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவுகள் சேகரிக்கும் பணி

65பார்த்தது
மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவுகள் சேகரிக்கும் பணி
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், உரிமைகள் திட்டத்தின்கீழ், மாற்றுத்

திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு செப்டம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை  இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 5 மாவட்டங்களில் சமூக தரவு பதிவுகள் நடத்தப்பட்டது.  


அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில், டிசம்பர் 3ம் தேதி முதல் சமூக தரவு பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில், தமிழ்நாடு நகர்ப்பபுற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்களும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்களும் தகவல் சேகரிக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள்.  

மாற்றுத்திறனாளிகள் விவரம் குறித்த கணக்கெடுப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில் தகவல்கள் பதிவு செய்யப்படும்.  


எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும், குடும்ப உறுப்பினர்களும் தாங்கள் தகவல்களை இக்கணக்கெடுப்பில் முழுமையாக தயக்கமின்றி வழங்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி