பயங்கர சாலை விபத்து.. 6 பேர் பலி

546பார்த்தது
பயங்கர சாலை விபத்து.. 6 பேர் பலி
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பயங்கர சாலை விபத்து நடந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. விபத்து நடந்த போது காரில் 8 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி