உத்தரபிரதேசத்தில் கேபினட் அமைச்சர் நந்த கோபால் நந்தியின் மகன் மற்றும் மருமகள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் திர்வா பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் அமைச்சரின் மகன் (அபிஷேக்) மற்றும் மருமகள் (கிருஷ்ணிகா) ஆகியோர் லேசான காயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமைச்சரின் மகன் அபிஷேக் வாகனத்தை ஓட்டினார் என்பது முதல்கட்ட தகவல். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவி வருகிறது.