கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம். எல். ஏ பரிசு

578பார்த்தது
கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம். எல். ஏ பரிசு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக விளையாட்டு அணி மற்றும் அல் அமீன் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்து கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் இருபது ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.