தென்காசி: பிரபல திருடன் கைது

2258பார்த்தது
தென்காசி: பிரபல திருடன் கைது
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டியா புரம் பகுதியில் வசித்து வருபவர்  பெரியசாமி. இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றுள்ளார் அப்போது இருசக்கர வாகனத்தில் தனது செல்போன் மற்றும் சட்டையை கழட்டி வைத்து விட்டு விவசாய வேலை செய்துள்ளார். வேலையை முடித்து விட்டு வந்து பார்த்தபோது தனது செல்போனை காணவில்லை இதுபற்றி பெரியசாமி சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் சேர்ந்தமரம் சார்பு ஆய்வாளர் ஜெயராஜ் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபர் ஆனைகுளம் தெற்கு தெருவை சேர்ந்த பீர்முகம்மது என்பவரின் மகன் அவுலியா மைதீன் (வயது 43) என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பெரியசாமியின் செல்போனை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஆனைகுளம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நிறுத்தி இருந்த சுரேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கேஸ் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு ஆகியவற்றை யும் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்து செல்போன், கேஸ் சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி