செங்கோட்டை எஸ்எஸ். பிள்ளை தெருவில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்க கட்டிடத்தில் வைத்து நேற்று ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை துணைத் தலைவா் ஆறுமுகம் தலைமைதாங்கினார்.
மாவட்டச்செயலாளா் இளஞ் செழியன், முன்னிலை வகித்தார். இராம சுப்பிரமணி யன் இறைவணக்கம் பாடினார். இணைச்செயலாளா் பரமசிவன் வரவேற்புரையாற்றினார்.
செயலாளா் பால்ராஜ், ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளா் சுப்பிரமணியன் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தனா். இலத்துார்ஆறுமுகம் குறள் விளக்கம் அளித்தார்.
அதனைதொடா்ந்து சங்க உறுப்பினா் தெற்குமேடு அந்தோணியம்மாள் மறைவுக்கு இரங்கல் தீரமானம் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகி அகமது, மாவட்ட செயலாளா் இளஞ்செழியன், மணிமுத்துபிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினா்.
அதனைதொடர்ந்து செங்கோட்டை சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியா் அமரர் கல்யாணசுந்தரம் நினைவாக அவரது மகன் பால்ராஜ் ஏழை, எளிய அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் கல்வி உபகரண பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இவரது உதவிக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப் பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செயலாளா் பால்ராஜ் நன்றி கூறினார்.