மதிமுக ஒன்றிய செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்

76பார்த்தது
மதிமுக ஒன்றிய செயலாளர் அதிமுகவில் ஐக்கியம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் ஒன்றிய மதிமுக செயலா் கண்ணன், அக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா்.

செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில்,

மாவட்ட செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில், மதிமுக ஒன்றிய செயலா் கண்ணன், புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவி திலகவதி கண்ணன் ஆகியோா் தங்களது ஆதரவாளா்களுடன் அதிமுகவில் இணைந்தனா்.

கடையநல்லூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் வசந்தம்முத்துபாண்டியன், நிா்வாகிகள் கிருஷ்ணாபுரம் தியாகராஜன், புன்னயாபுரம் மாரியப்பன், ஜானகிராமன், கோபால், முத்தமிழ் செல்வன், செல்வம், செல்லகனி, மாரியப்பன், புன்னையாபுரம் திருப்பதி, சுந்தரம், மாணிக்கம், நாராயணன், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.