தென்காசியில் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அறிவுரை

2953பார்த்தது
தென்காசியில் வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினா் அறிவுரை
தென்காசி மாவட்டம், தென்காசியில் காவல்துறை சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தென்காசி ரயில்வே மேம்பாலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காவல்ஆய்வாளா் பாலமுருகன் தலைமை வகித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.

விபத்துகளினால் ஏற்படும் பாதிப்பு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் இழப்புகள், தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், புத்தாண்டு முதல் சாலை விதிகளை கடைப்பிடிப்போம் என்ற உறுதிமொழி மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி