தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து

55பார்த்தது
தென் கொரிய எதிர்க்கட்சி தலைவருக்கு கத்திக்குத்து
தென் கொரியாவின் எதிர்க்கட்சி தலைவர் லீ ஜே-மயுங், ஜனவரி 2ஆம் தேதி தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கத்தியால் குத்திய நபர், லீயிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது போல் வந்து அவரை கத்தியால் குத்தியுள்ளார். அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லீ ஜே-மயுங் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூசானில் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தை அவர் பார்வையிட வந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.