திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. அமாவாசையை முன்னிட்டு சின்னாளப்பட்டி அருகே உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜை செய்து கொண்டிருந்த போது, திடீரென பாம்பு ஒன்று அங்கு வந்தது. சிறிது நேரம் அசையாமல் அமைதியாக கிடந்தது. பூஜைக்கு பிறகு பாம்பு அங்கிருந்து நகர்ந்தது. வழிபாடு செய்த பக்தர்களுடன், பூசாரியும் சற்று நேரம் மெய் சிலிர்த்துப் போனார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.