108 பால் குடங்கள் எடுத்து சென்ற பக்தர்கள்

85பார்த்தது
108 பால் குடங்கள் எடுத்து சென்ற பக்தர்கள்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதப் பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. குன்றக்குடி திருமடத்திலிருந்து பொன்னம்பல அடிகளாா் தலைமையில் பக்தா்கள் 108 பால்குடம் எடுத்துக்கொண்டு தேரோடும் வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். அவா்கள் மலை மீது அமைந்திருக்கும் சண்முகநாதப்பெருமான் கோயிலை அடைந்தனா். அங்கு சுவாமிக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பால்குட ஊா்வலத்தில் குன்றக்குடி கிராமத்திட்டக்குழுத் தலைவா் கே. பாலகிருஷ்ணன், மருத்துவா் ஸ்ரீதா், தமிழ்நாடு விளையாட்டு, உடற்கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஆா். திருமலைச்சாமி, குன்றக்குடி ஆதீன மடத்தின் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி