சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், கத்தப்பட்டு கிராமத்தில், அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், அவர்கள் தலைமையில், அரசின் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் இன்று சுமார் மதியம் 3 மணியளவில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்
பின்னர் அமைச்சர்பேசுகையில்:
சுதந்திரப் போராட்ட வீரர் ”வாளுக்கு வேலி அம்பலம்” அவர்களுக்கு ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலையும் நகரம்பட்டியில் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் நிறைவுற்று, ஒவ்வொரு ஆண்டும் அன்னார் அவர்களின் பிறந்த நாள் அரசு விழா, ஒரு இன்னும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
மொழி, இனம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கென பாடுபட்டவர்களை கௌரவிக்கின்ற வகையிலும், அவர்களின் புகழை போற்றுகின்ற வகையிலும், அவர்களுக்கு நினைவகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் திருவுருவச்சிலைகள் ஆகியவைகளை அமைத்து, எதிர்கால சந்ததியினர்கள் அறிந்து கொள்கின்ற வகையில், சிறப்பான நடவடிக்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்டு,
தலைசிறந்த முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழந்து வருகிறார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார்.