பெருமாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள்

1560பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர்பெருமாள் கோவில் தெருவில் அமைந்துள்ள புராண சிற்பம் மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 2024 ஆங்கில புத்தாண்டு திருநாளை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வழிபட்டு வந்தனர் முன்னதாக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி உடன் சிறப்பு பூஜைகள் துவங்கியது இக்கோவிலின் சிறப்பு அம்சமான தனி சன்னதி கொண்டு அருள்வாக்கும் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் மற்றும் பிரதான சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மூலவர் உற்சவ தெய்வங்களுக்கு வண்ணமலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து தீப தூப ஆராதனை காண்பித்து துளசியால் அர்ச்சனைகள் செய்யப்பட்டன பின்னர் பக்தர்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் பாடினர் அர்ச்சகர்கள் மகாலட்சுமி அஷ்டோத்திர பூஜைகள் நடத்தி நட்சத்திர தீபம் ஏக முக தீபம் பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி