ஹவலா பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ள நபர்கைது

69பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி பின்புறம் உள்ள சாலையில் ஹவாலா பணம் ஒருவர் கொண்டு வருவதாக தகவல் அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று காரில் ஆயுதங்களுடன் காத்திருந்தது அவ்வழியாக சென்ற சாக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் நம்பர் பிளேட் இல்லாமல் நின்றிருந்த காரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தார் அப்பொழுது காரில் கத்தி மற்றும் கையுறைகள் இருந்ததை பார்த்தவர் இது குறித்து விசாரித்த போது சுதாரித்துக் கொண்ட மூன்று பேர் காரில் இருந்து தப்பி ஓடினர். மேலும் காரைக்குடி சுப்பிரமணியபுத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மட்டும் பிடிபட்டார் அவரிடம் நடத்திய விசாரணையில் காரைக்குடி கீழத் தெருவை சேர்ந்த அழகேசன், முத்துராமலிங்கத் தேவர் நகரை சேர்ந்த விஜய், மற்றும் கோதண்டராமன் மூவரும் தப்பிய ஒடியது தெரியவந்தது தப்பி ஓடிவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி