சென்னை பூந்தமல்லியில் சித்த மருத்துவமனை நடத்தி வரும் பெருமாள், உடல்நிலை சரியில்லாமல் வந்த ராஜேந்திரன் என்கிற முதியவருக்கு ஆங்கில மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியுள்ளார். ஊசி போட்ட 10வது நிமிடத்தில் ராஜேந்திரன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சித்த மருத்துவர் பெருமாள் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ஏராளமான ஆங்கில மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.