சாலையில் இளம் பெண் மானபங்கம்.. அதிர்ச்சி வீடியோ

85724பார்த்தது
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள திலக் நகர் பகுதியில் அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட இளம் பெண் குண்டர்களால் துன்புறுத்தப்பட்டார். இச்சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் நடந்துள்ளது. ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் நடந்து சென்று கொண்டிருந்த போது மூன்று குண்டர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். அநாகரீகமாக பேசி அவர்களை துரத்தி பெண்ணை தொட்டுப் பிடிக்க முயற்சித்தனர். அப்போது அவ்வழியாக வந்த சில முதியவர்கள் குண்டர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பான இடங்களில் நடைபயற்சி மேற்கொள்வதோடு, பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக மிளகு ஸ்பிரே உள்ளிட்ட தற்காப்பு சாதனங்களை எப்போதும் கையில் வைத்துக் கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி