வசந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

53பார்த்தது
வசந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
ஓமலூர் கோட்டை பகுதியில் அபிதகுஜாம்பாள் சமேத வசந் தீஸ்வரர் கோவில் உள்ளது. சரபங்கா முனிவரால் பூஜிக்கப் பட்ட வரலாற்று சிறப்புமிக்க கெட்டி முதலிகள் கோட்டை கட்டி ஆட்சி செய்த கோட்டையில் இக்கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 18-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடர்ந்து முளைப்பாலிகை போடுதல், கங்கணம் கட்டுதல் நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வந் தது.

இந்த நிலையில் நேற்று காலையில் ஓமலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பக் தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓமலூர் பேரூராட்சி தலைவர் செல்வராணி, தி. மு. க. நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம் தளபதி நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தீர்த்தக்குட ஊர்வலம் ஓமலூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ரெயில்வே மேம்பாலத்தை கடந்து கோவிலை சென்றடைந்தது. இதில் ஆண், பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்று தீர்த்தக்குடம் எடுத்தனர். மாலையில் முதல் கால யாக பூஜை நடந்தது. இன்று (புதன்கிழமை) காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் தொடர்ந்து கலைநிகழ்ச்சி மற் றும் பட்டிமன்றம் நடக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி